அசாம்: திப்ருகரை சேர்ந்த ராஜிப் (42) தனது மனைவி சோனம் மற்றும் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் (டிச. 08) நள்ளிரவு, கணவரை சோனம் கூரான ஆயுதத்தால் சரிமாரியாக குத்தி கொலை செய்தார். ராஜிப் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். தொடர்ந்து சோனம் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். குடும்ப தகராறில் இந்த கொடூரம் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.