தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் மனு அளித்தார். அதில், “கூடலுார் முதல் முத்துத்தேவன்பட்டி வரை 14 ஆயிரம் ஏக்கர்களில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. நெற்பயிருக்கு இன்னும் 90 நாட்களுக்கு மேல் நீர் தேவைப்படுகிறது. இதற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தற்போது எடுக்கப்படும் நீரின் அளவை குறைத்து எடுத்தால் தான் நஞ்சை பயிர்களை காப்பாற்ற இயலும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.