எல்ஐசி நிறுவனம் பீமா சகி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று (டிச. 09) தொடங்கி வைத்தார். பெண்களுக்கான இந்த சிறப்பு திட்டத்தில் இணைய குறைந்தபட்ச கல்வி தகுதி 10ஆம் வகுப்பு ஆகும். பெண்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுவதோடு மாதந்தோறும் ரூ. 7,000 உதவித் தொகையும் கிடைக்கும். கூடுதல் தகவலை Licindia.in இணையதளத்தில் காணலாம்.