அதிமுக எம்.பி. தம்பிதுரை சுரங்க மசோதாவை ஆதரித்து பேசியதாக, உண்மைக்கு புறம்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும், “ஏலம் முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்பதால் வரவேற்பதாக தம்பிதுரை தெரிவித்தார். ஏலம் முறையை வரவேற்பதாக தான் தம்பிதுரை தெரிவித்தார். தமிழ்நாட்டில் அனுமதியின்றி கனிம வளங்கள் சுரண்டப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன” என குற்றம்சாட்டியுள்ளார்.