வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற மேலும் 24 மணி நேரம் ஆகலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று (டிசம்பர் 10) முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.