டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோனின் 2025 மாடலை அறிமுகப்படுத்தியது. மோட்டோசோல் 4.0 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட முற்றிலும் புதிய ரோனின் 2025 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 பைக்கிற்கு போட்டியாக அமைகிறது. 2025 டிவிஎஸ் ரோனின் பைக்கின் விலை அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கிலும் 225.9சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.