சென்னை ஐயப்பந்தாங்கல் அருகே நேற்று (டிச.9) தமிழ் என்ற இளைஞரை ஒரு கும்பல் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. முன்பகை காரணமாக இந்த சம்பவம் நடந்திருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், தற்போது இளைஞரை வெட்டிய 10க்கும் மேற்பட்ட கும்பல், தங்களது இருசக்கர வாகனங்களில் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில், இளைஞர்கள் தங்களது கையில் பட்டாக்கத்தியுடன், சாலையில் இருக்கும் வாகனங்களை சேதப்படுத்டியவாறு சென்றுள்ளனர்.