சலாக் (Salak) பழம் இந்தோனேசியாவில் அதிகம் கிடைக்கிறது. இதன் தோல் பாம்பின் தோல் போல உள்ளதால் இதற்கு Snake fruit என்ற பெயரும் உண்டு. இதனுடைய சுவை அன்னாசிப்பழமும், பலாப்பழமும் சேர்ந்தது போல இருக்குமாம். பாம்பு பழத்தை சாப்பிடுவதால் செரிமானப் பிரச்னையை சரிசெய்தல், கண் பார்வை குறைபாட்டை போக்குதல், உடல் எடைக்குறைப்பு, ரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்துதல் ஆகிய பிரச்னைகளைத் தீர்க்கலாம் என சொல்லப்படுகிறது.