
சேலத்தில் நகைக்கடை உரிமையாளர் தற்கொலை
சேலம் கொண்டலாம்பட்டி அருகே வேடுகாத்தான் பட்டியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 47). செவ்வாய்பேட்டை பகுதியில் நகை உருக்கும் கடை நடத்தி வந்துள்ளார். வியாபாரத்தில் நஷ்டம் ஆனதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். மனைவியிடம் பழனி முருகன் கோவிலுக்கு செல்வதாக கூறிய சந்திரன், அதே பகுதியில் உள்ள தாய் வீட்டில் இருந்தார். சம்பவத்தின்று நள்ளிரவில் வீட்டில் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்து கதறி அழுத தாயின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.