

சேலம் அருகே பிணம் போல் படுத்து வினோத நேர்த்தி கடன்
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் மிகவும் பழமையான மாரியம்மன், காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் மூன்றாவது வாரம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் விழாவையொட்டி பக்தர்கள் பொங்கல் வைத்து, அழகு குத்துதல், மற்றும் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். களைகட்டிய கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக வினோதமான நேர்த்தி கடனாக அதே ஊரைச் சேர்ந்த சமையல் மாஸ்டரான பாலகிருஷ்ணன் என்பவர் ஊர் நன்மைக்காகவும், ஊர் மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டுமென பிணம் வேடமணிந்து பாடை கட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் படுக்க வைத்து ஊர் மக்கள் அந்த தேரை ஊர்வலமாக சுடுகாடு வரை தூக்கிச் சென்று கோழியை காவு கொடுத்து பின்னர் அவரது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். சுமார் நூறாண்டு காலமாக இதுபோன்று பிணம் வேடமணிந்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வருவது வழக்கமாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் சுழற்சி முறையில் இதுபோன்று ஊர் நன்மைக்காகவும் ஊர் மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டுமெனவும் நேர்த்தி கடனை செலுத்தி வருவதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்