தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதை மாவட்ட மக்கள் பார்க்கும் வண்ணம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. சேலம் பழைய பஸ் நிலையம், தாதகாப்பட்டி ஆகிய 2 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. ஆத்தூர், நரசிங்கபுரம், மேட்டூர், எடப்பாடி, இடங்கணசாலை, தாரமங்கலம் ஆகிய நகராட்சிகளில் பொதுமக்கள் கூடும் 6 இடங்கள், ஊராட்சி ஒன்றியங்களில் 40 இடங்கள், பேரூராட்சிகளில் 52 இடங்கள் என மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் பட்ஜெட் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. இது தவிர செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் ஆத்தூர் பஸ் நிலையம், நரசிங்கபுரம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதை அந்தந்த பகுதி மக்கள் பார்வையிட்டனர். இன்று (சனிக்கிழமை) வேளாண்மை பட்ஜெட்கூட்டத்தொடரையும் பொதுமக்கள் அறியும் வகையில் நேரலை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கலெக்டர் பிருந்தாதேவி கூறியுள்ளார்.