கோட்டை பெருமாள் கும்பாபிஷேக விழா: முகூர்த்தக்கால் நடும்விழா

83பார்த்தது
சேலம் மாநகரில் பிரசித்திபெற்ற கோட்டை பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பழமைவாய்ந்த இந்த கோவிலில் புனரமைப்பு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னதாக கோவிலில் பாலாலயம் நடந்தது.
இந்த நிலையில் பணிகள் நிறைவடைந்துள்ளதால் கோட்டை பெருமாள் கோவிலில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 20-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதையொட்டி நேற்று காலை முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
சுதர்சன பட்டாச்சாரியார் உள்பட குழுவினர் மந்திரங்கள் முழங்க மேள தாளத்துடன் அலங்கரிக்கபட்ட முகூர்த்தக்கால் கோவில் வளாகத்தில் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் யாகசாலை அமைப்பதற்கான கட்டுமான பணிகளும் தொடங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கோட்டை மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேஸ்வரி, குழு உறுப்பினர்கள் சுந்தரகோபால், சுரேஷ்பாபு, அறிவழகன், குணசேகரன், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் சரவணன், கோவில் செயல் அலுவலர் அனிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி