வெந்நீர், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமி நாசினியாக பயன்படுத்தலாம். இதை எரித்து சாம்பலை தேங்காய் எண்ணெய் உடன் கலந்து அடிவயிற்றில் தடவி வந்தால் வாயுத்தொல்லை நீங்கும். அறையை சுற்றிலும், வசம்பு பொடியை ஆங்காங்கே தூவி வைத்து விட்டால் போதும் பூச்சிகள் முதல் நுண்ணுயிரிகள் வரை உள்ளே நுழைவது தடுக்கப்படும். குமட்டல், வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி பிரச்னைக்கு தீர்வு தரும்.