தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

82பார்த்தது
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -
தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பட்டியலின மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய 18 சதவீத இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை. எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அனைத்து பிரிவினருக்கும் முறையான பங்களிப்பு வழங்க வேண்டும். அருந்ததிய மக்களுக்கு வழங்கப்படும் 3 சதவீத உள்இட ஒதுக்கீட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மே மாதம் போராட்டம் நடத்தப்படும்.
மும்மொழி கொள்கை விவகாரத்தில் தி. மு. க. திட்டமிட்டு அரசியல் செய்கிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப்பொருள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. தொகுதி வரையறை தொடர்பாக தி. மு. க. நடத்திய அனைத்துக்கட்சி கூட்டம் அரசியல் நாடகம். இதனால் தான் புதிய தமிழகம் கட்சி கலந்து கொள்ளவில்லை.
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதற்கேற்ப வலுவான கூட்டணி ஏற்படும். மேலும் தமிழகத்தில் தனி ஒரு கட்சி ஆட்சி அமைக்க கூடாது. கூட்டணி ஆட்சி அமையும். கூட்டணி குறித்து இப்போது கூற முடியாது. தி. மு. க. ஆட்சியில் மக்களுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தரமான கல்வி மட்டுமே பிரச்சினை. மொழி பிரச்சினை இல்லை. உலகில் உள்ள மற்ற மனிதர்களுடன் உறவாட என்ன மொழி தேவையோ அதை கற்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி