சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று (மார்ச் 21) ஊழியர்கள் கியாஸ் அடுப்பு மூலம் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது சமையலறையில் திடீரென தீப்பிடித்தது. இதைப் பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.