சேலம் களரம்பட்டி வீரவாஞ்சி தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 91). இவருடைய மனைவி சரசு (82). இவர்கள் இருவரும் நேற்று மனு கொடுப்பதற்காக தள்ளாடியபடி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: -
தறித்தொழில் நடத்தி பல சிரமங்களுக்கு இடையில் வீடு கட்டினோம். எங்களது மகன், மகள்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். எனது மூத்த மகன் எங்களுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தான். அதே வீட்டில் சிறிய அறையில் நாங்கள் தங்கி உள்ளோம். மூத்த மகன் தொழில் விரிவாக்கத்திற்காக பணம் கேட்டதால், ரூ. 1½ கோடி மதிப்பிலான வீடு, தறி கூடங்களை தானமாக எழுதி கொடுத்தோம். அப்போது எங்களுக்கு மூத்த மகன் மாதம் ரூ. 10 ஆயிரம் வழங்கி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவன் இறந்து விட்டான். எனவே எங்கள் வாழ்வாதாரத்திற்காக எனது மகனுக்கு தானமாக கொடுத்த சொத்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார். அதன்பிறகு இருவரும் கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் மனு அளித்து விட்டு சென்றனர்.