தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் வெளியான சில பாடல்களில் உள்ள ஆபாச நடன அசைவுகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் தெலங்கானா மகளிர் ஆணையம், "திரைப்படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அருவருப்பாக காட்டுவது சரியல்ல. நடன இயக்குனர்கள், பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இல்லையெனில் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.