குடிநீர் இணைப்பு வேண்டி பெண்கள் முற்றுகை போராட்டம்

85பார்த்தது
சேலம் மாநகராட்சி 47 வது வாடுக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி கார்கில் நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு 19 பிளாக் உள்ளது இதில் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கூடுதல் குடிநீர் இணைப்பு கேட்டு பல கட்டத்தில் போராடி நடவடிக்கை இல்லாததால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் குடிநீர் பைப் கேட்டு முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து வந்த 47 வது வார்டு கவுன்சிலர் புனிதா மற்றும் அவரது கணவர் சுதந்திரம் ஆகியோர் முற்றுகையிட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து விமலா கூறுகையில் எங்கள் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஒரு பிளாக்கில் 24 வீடுகள் உள்ளது அதில் ஒரு பைப் மட்டுமே உள்ளதால் முறையாக தண்ணீர் பிடிக்க முடியவில்லை தண்ணீர் பிடிப்பதற்குள் தண்ணீர் நின்று விடுகிறது. எனவே கூடுதல் இணைப்பு கேட்டு கடந்த ஆறு மாதமாக போராடி வருகிறோம். என கூறினார்.
இதுகுறித்து கவுன்சிலர் புனிதா கூறுகையில் குடிநீர் இணைப்பு குறித்து என்னிடம் தெரிவிக்காமல் அதிகாரியிடம் தெரிவித்ததாகவும் இருப்பினும் 13 இணைப்புகளுக்கு மாநகராட்சியில் அனுமதி பெற்று டெண்டர் விடப்பட்டு பின்னர் 13 இணைப்புகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி