தெலுங்கானாவில் இருந்து பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை சேலம் கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் ஓட்டி வந்தார். லாரி கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் வந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சேலம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநர் மூர்த்தி மற்றும் அவரது மகன் குமார் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.