சேலம் நகரம் - Salem City

சேலத்தில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை

சேலத்தில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை

சேலம் அழகாபுரம் பாரதி தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 35), எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி கவுசல்யா. இவர்களுக்கு ஏற்கனவே 8 வயது ஒரு மகள் உள்ளாள். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கவுசல்யாவிற்கு 2-வது பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவ செலவிற்காக சண்முகம் மனைவியின் 4 பவுன் நகையை அடமானம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவரிடம் அடமானம் வைத்த நகையை மீட்டு தருமாறு கவுசல்யா கேட்டுள்ளார்.  இதுதொடர்பாக அவர்களிடையே தகராறும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கவுசல்யா தனது கணவருடன் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து சண்முகம் செல்போன் மூலமும், நேரில் சென்றும் மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் கவுசல்யா வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சண்முகம் மனவேதனையில் சித்தப்பா வெங்கடேசன் வீட்டுக்கு சென்றார்.  இரவில் அங்குள்ள ஒரு அறையில் தூக்குத் தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது சண்முகம் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా