சென்னையில் பெண்கள் துவைத்து காயப்போடும் உள்ளாடைகள் மாயமாகி வந்துள்ளது. மர்ம நபர் ஒருவர், ஆண்கள் இல்லாத வீட்டிற்குச் சென்று பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதே போல் கடந்த ஆண்டு தமிழ் பிரபு என்ற சைக்கோ நபர் இதே வேலையைச் செய்து வந்தார். இதுவும் அவராக இருக்குமோ என எண்ணிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், தமிழ் பிரபு தான் இந்த வேலையைச் செய்தது என தெரியவந்துள்ளது.