சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் தற்காலிகமாக பணியாற்றி வரும் தொழிலாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, கடந்த 12 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழக வெற்றி கழகம் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையில் சேலம் கோட்டை மைதானத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும்உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் மகளிர் அணியினர் கலந்து கொண்டு தமிழக அரசு உடனடியாக ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.