கணவருக்கு இணையாக வேலை பார்த்து ஊதியம் பெறும் மனைவிக்கு ஜீவனாம்சம் அளிக்க உத்தரவிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. கணவரிடம் விவாகரத்து பெற்ற மனைவி, ஜீவனாம்சம் கோரி மனு தொடுத்திருந்தார். அதற்கு கணவர் தரப்பில், மனைவியும் தன்னைப் போல ரூ.60,000 சம்பளம் பெறுகிறார் என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதத்தை கேட்ட சுப்ரீம் கோர்ட், கணவருக்கு இணையாக மனைவி சம்பளம் வாங்குவதை சுட்டிக்காட்டி, மனுவை தள்ளுபடி செய்தது.