ராஜஸ்தான்: ஹனுமன்கர் பகுதியில் கட்டிலில் படுக்கவைத்து ஒட்டகத்தின் மீது பெண் ஒருவர் நடனமாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தெருவில் போடப்பட்ட கயிற்றுக் கட்டிலின் மீது ஒட்டகத்தைப் படுக்கவைத்து, அதன் இரு கால்களையும் கட்டியுள்ளனர். அதன்பின் அந்த ஒட்டகத்தின் மீது இளம்பெண் ஒருவர் ஏறி நடனமாடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக விலங்கு நல அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.