ரயிலில் பயணம் செய்யும் பெண்கள், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ெரயில்வே போலீசார் சார்பில் அவ்வப்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ெரயில்களில் கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், அவர்களுக்கு ரெயில் பயணத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலும் சேலம் ஜங்ஷன் ரெயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று மாலை நடத்தினர்.
சேலம் உட்கோட்ட (பொறுப்பு) துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், ரயில்வே பாதுகாப்பு படை அலுவலர் செங்கப்பா, ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஸ்மித் ஆகியோர் கலந்து கொண்டு ரயில் பயணிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் குளிர்பானங்களையோ, தின்பண்டங்களையோ வாங்கி சாப்பிக் கூடாது. ரயில் பயணத்தின் போது நகைகள் அணிந்து கொண்டு ஜன்னல் ஓரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
ரயில் பயணத்தின் போது சந்தேகப்படும் படியான நபர்கள் கண்டறியப்பட்டால் 139, 1512, 992500500 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் எனவும், 94981 01963 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுதொடர்பாக துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.