கிறிஸ்தவர்களின் முக்கிய நிகழ்வான சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி குழந்தை இயேசு பேராலயத்தில் இன்று அதிகாலை துவங்கியது. இதனை ஒட்டி ஆலயத்தின் இறை மக்கள் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் பங்கேற்றவர்களுக்கு நெற்றியில் சாம்பல் சிலுவை அடையாளமாக போடப்பட்டது.
சேலம் நான்கு ரோடு குழந்தை ஏசு பேராலாயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில் சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடத்தினார்.
தொடர்ந்து திருப்பலியில் பேராலயத்தின் பங்குத்தந்தை ஜோசப் லாஸர் மற்றும் பங்கு தந்தையர்கள், அருட் சகோதரிகள், கலந்து கொண்டு , இந்த ஆலயத்தில் உள்ள இறை மக்கள் அனைவருக்கும், சாம்பல் புதனை கடைபிடிக்கும் விதமாக, நெற்றியில் சாம்பலை சிலுவை அடையாளமாக போடப்பட்டது. இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சிறப்பு திருப்பலியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் தினமும் 40 நாட்கள் சிறப்பு திருப்பலி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.