சேலத்தில் இளம்பெண் சாவில் சந்தேகம் உறவினர்கள் சாலை மறியல்

59பார்த்தது
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கண சாலை நகராட்சி இகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன் இவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இன்று காலை கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் தாக்கியதில் மனைவி உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறப்பிற்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் அதுவரை உடலை பெற மாட்டோம் என சாலை மறியல் போராட்டம். போக்குவரத்து பாதிப்பு. காவல்துறையினர்
அனைவரையும் குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தி சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி