சேலம் மாநகர் குப்தா நகர் பகுதியில் மீனா என்பவர் 15 மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு மீனா வளர்த்து வந்த மாடுகளில் கறவை மாடு ஒன்று வெறிநாய் கடித்ததில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மீனா கொடுத்த தகவலின் பேரில் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க சேலம் மாநகரில் உலாவிவரும் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய மீனா வெறி நாய் கடித்து உயிரிழந்த கறவை மாட்டிற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.