சிறுபான்மை ஆணையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி

51பார்த்தது
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப்போட்டி சேலம் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேவநேய பாவாணர் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையம் துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் கலந்துகொண்டு மாணவ மாணவிகள் இடையே சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றே குலம் ஒருவனே தேவன், மனிதநேயம் ஓங்கட்டும் மதவெறி நீங்கட்டும், மக்களாட்சியின் மாண்பும் மதச்சார்பற்ற அரசும் உள்ளிட்ட பத்து தமிழ் தலைப்புகளின் கீழும், 10 ஆங்கில தலைப்புகளின் கீழும் மாணவ மாணவிகள் உரையாற்றி தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதில் சேலம் மாவட்டம் முழுவதிலும் இருந்து 47 கல்லூரிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கேரம் அசோசியேஷன் தலைவர் நாசர்கான், கல்லூரி முதல்வர் செண்பக லட்சுமி, சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் முகமது ரஃபி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில் அரசன், அன்சர் பாஷா உட்பட பலரும் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி