கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே. ஏ. பாண்டியன் ஏற்பாட்டில், எஸ். டி. பி. ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் ஓ. எம். ஜாகிர் உசேன், லால்பேட்டை திமுக முன்னாள் பேரூர் செயலாளர் எம். கே. ஹாஜா முகைதீன், இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் லால்பேட்டை முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சபியுல்லா, பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான சிதம்பரம் நகர செயலாளர் சாமிநாதன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை கழக பேச்சாளர் தங்க. தனபால், பாட்டாளி மக்கள் கட்சியின் குமராட்சி ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், அமமுக நிர்வாகிகளான பரங்கிப்பேட்டை முன்னாள் ஒன்றிய செயலாளர் திருஞானமூர்த்தி, குமராட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜாபர் அலி, பரங்கிப்பேட்டை நகர இணை செயலாளர் சதீஷ் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது புதியதாக கழகத்தில் இணைந்தவர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அதிமுக துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என். முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம் ஆகியோர் உடனிருந்தனர்.