உலகில் பல்வேறு வினோதமான மற்றும் வியப்பை ஏற்படுத்தும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் ரஷ்ய நாட்டில் அமைந்துள்ள 'சட்யா கெய்ன் ஹவுஸ்' என்ற கட்டிடம். இது உலகின் அதிசயமிக்க மற்றும் அபாயகரமான கட்டிட அமைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது. இடிந்து விழும் நிலையில் இந்த கட்டிடம் இருக்கும் போதிலும் கடந்த 30 ஆண்டுகளாக கம்பீரமாகவே நிற்கிறது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.