சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மற்றும் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் சேலம் குரங்குச்சாவடி பகுதி, நகரமலை அடிவாரம் ரோடு, 36-வது கோட்ட 40 அடி ரோடு பகுதியில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 4½ ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களாக வினியோகம் செய்தனர்.
அதாவது, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க 3 சதவீதம் இட ஒதுக்கீடு, 52.31 லட்சம் மாணவர்களுக்கு ரூ.7,322 கோடி செலவில் விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை துண்டு பிரசுரமாக அச்சிட்டு வீடு வீடாக சென்று மாவட்ட பொறுப்பாளர்கள் எம்.கே.செல்வராஜூ, ஏ.கே.எஸ்.எம். பாலு ஆகியோர் பொதுமக்களிடம் வழங்கினர்.