ஜெர்மனியில் நடைபெற்ற 'பிரீஸ்டைல்' செஸ் தொடரின் முதல் நாளில் இருந்தே உலக சாம்பியன் குகேஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தொடர்ந்து தோல்வியை சந்தித்த அவர், 6வது இடத்திற்கான போட்டியிலும் தோல்வி கண்டார். நேற்று (பிப்.,14) 7வது இடத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில், 30ஆவது நகர்த்தலில் குகேஷ் தோல்வியடையந்தார். இதனால், அவர் இந்த தொடரில் 8ஆவது இடம் பிடித்தார். அவருக்கு ரூ. 17.32 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.