சேலத்தில் மாநில அளவிலான கேரம் போட்டிகள் தொடக்கம்

76பார்த்தது
தமிழ்நாடு கேரம் சங்கம் மற்றும் சேலம் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் 64ஆவது மாநில அளவிலான மிகச் சிறியோருக்கான கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இப்போட்டியில், 12 மற்றும் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சென்னை, கோவை, கன்னியாகுமரி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 476 சிறுவர், சிறுமியர்கள் பங்கேற்றுள்ளனர். 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளை, மாவட்ட உதவி ஆட்சியர் அக்ரிதி சேத்தி தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை அகில இந்திய கேரம் சம்மேளனத்தின் துணைத் தலைவரும், சேலம் மாவட்ட கேரம் சங்க தலைவருமான நாசர்கான். மாவட்ட கேரம் சங்க செயலாளர் அன்பன் டேனியல், பொது செயலாளர் மரியம் இருதயம் ஆகியோர் செய்திருந்தனர். தொடர்ந்து 9ஆம் தேதி மாலை பரிசளிப்பு விழா நடக்கிறது. இதில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகர தெற்கு துணை ஆணையர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்க உள்ளனர்.

தொடர்புடைய செய்தி