அப்பா பைத்தியசாமி கோயில் குருபூஜை விழா அமைச்சர் பங்கேற்பு

65பார்த்தது
சேலம் சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் 25 ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடைபெற்றது. அதிகாலை 4. 30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, விநாயகர் வழிபாடு, உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகள் நடந்தன.
தொடர்ந்து விநாயகர் முருகன் ஸ்ரீ சத்குரு அப்பா பைத்தியசாமிக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு விதமான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அப்பா பைத்தியசாமிக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த குருபூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு குருபூஜை நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேட்டியளித்தார்: அப்போது சிறு வயது முதல் அப்பா பைத்தியசாமி மீது தீவிர பக்தி கொண்டவன் எல்லா விஷயங்களுக்கும் இங்கு வந்து வேண்டிக் கொள்வேன் அதேபோல ஒவ்வொரு ஆண்டும் குரு பூஜையில் கலந்து கொள்வது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். மத்திய அரசு அறிவித்த பட்ஜெட் வரவேற்கத்தக்கது பாராட்டக்கூடியது என தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி