குத்துச்சண்டை போட்டி: சாதனை மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டு

67பார்த்தது
குத்துச்சண்டை போட்டி: சாதனை மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டு
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி மயிலாடுதுறையில் நடந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 3 ஆயிரம் பேர் பல்வேறு எடை பிரிவுகளில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் சேலம் குத்துச்சண்டை கிளப் வீரர் சேர்வராயன் வெள்ளி பதக்கமும், லோக ரட்சக சித்தார்த்தன் வெண்கல பதக்கமும் பெற்றனர். 

அதேபோல் பெண்கள் பிரிவில் ராஜராஜேஸ்வரி, மதுஸ்ரீ ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர். இந்த சாதனை மாணவர்கள், அமைச்சர் ராஜேந்திரனை சந்தித்து பாராட்டு பெற்றனர். அப்போது மாநகர தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தகண்ணன், பயிற்சியாளர் சாமிதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி