சேலத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சேலம் மாவட்ட குழுவின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசின் புதிய உணவுக் கொள்கை, தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் தடை, ஒன்றிய அரசே கொள்முதல் செய்திட உத்தரவு என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் என். கே. செல்வராஜ் தலைமையில் சேலம் கோட்டை பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் எம். கண்ணகி, மாவட்ட செயலாளர் ஏ மோகன், மாவட்ட துணை செயலாளர் எம். ராமன், ஏ. கந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் ஒன்றிய அரசுகளுக்கு எதிராக பல்வேறு கண்டன உரைகளை நிகழ்த்தினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி