சேலம்: அரசு தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு இன்று நடந்தது

56பார்த்தது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குரூப் 2 எழுத்துத் தேர்வு சேலத்தில் இன்று 5 மையங்களில் நடந்தது. சேலம் அரியானூர் அரசு சட்டக் கல்லூரியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் கலெக்டர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குரூப் 2 தேர்வு எழுத 1420 பேர் விண்ணப்பித்தனர். இன்றைய தினம் தேர்வு எழுத 1318 பேர் வருகை புரிந்தனர். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் பொருட்டு பல்வேறு நிலையிலான அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைகளுக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவுச்சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதை உறுதி செய்யும் வகையில் கலெக்டர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி