சேலம்: சீமான் பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை..வேல்முருகன்

72பார்த்தது
சேலத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகியவர்கள், தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணையும் நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 31) நடந்தது. இதில், பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம். எல். ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் யாரையும் நான் அழைக்கவில்லை. அவர்களாகவே அக்கட்சியில் இருந்து விலகியும், விலக்கப்பட்டவர்களும் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்து வருகிறார்கள். 

ஒட்டுமொத்த தமிழ் சமூக மக்களின் வாழ்வுரிமைகளை பாதுகாக்க சட்டசபையில் நான் குரல் கொடுத்து வருகிறேன். எனது பல கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். தமிழக அரசியலில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் நேரத்தில் தி. மு. க. , அ. தி. மு. க. போன்ற திராவிட கட்சிகளுடன் நாம் கூட்டணி அமைத்து வருகிறோம். தந்தை பெரியார் மற்றும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் ஆகியோரை பற்றி நேர்எதிரான கருத்துக்களை சீமான் பேசி வருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. 

அனைத்து சமுதாய மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்றால் தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதுதான் ஒரே தீர்வாக இருக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இவ்வாறு வேல்முருகன் எம். எல். ஏ. கூறினார்.

தொடர்புடைய செய்தி