சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்திய திருநாட்டின் 76வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து 40 பயனாளிகளுக்கு 2. 18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து காவல்துறை, மருத்துவதுறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.