சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் அமைதி ஊர்வலம் நடந்தது. முன்னாள் முதல்வர் மறைந்த பேரினர் அண்ணாவின் 56வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலையிலிருந்து பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அமைதி ஊர்வலம் நடந்தது.
மத்திய மாவட்ட அவை தலைவர் சுபாஷ் தலைமை வகித்தார். பொருளாளர் கார்த்திகேயன், மேயர் ராமச்சந்திரன், மாநகர செயலாளர் ரகுபதி முன்னிலை வகித்தனர். பெரியார் சிலையில் இருந்து திருவள்ளுவர் சிலை, தலைமை தபால் நிலையம் வழியே அண்ணா சிலைக்கு ஊர்வலம் வந்தடைந்தது. பின்னர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தேர்தல் பணிக்குழு செயலாளர் தாமரைக்கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் மணி, மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.