சேலம் கலெக்டர் ஆபீசில் அருள் எம்எல்ஏ திடீர் தர்ணா

71பார்த்தது
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி, செட்டிசாவடி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என கடந்த சில நாட்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று அந்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் எம்எல்ஏ அருள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டரை சந்தித்து மனு வழங்க வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எம்எல்ஏ உள்பட 10 பேர் மட்டும் செல்ல அனுமதி வழங்கினர். 

திடீரென கலெக்டர் அலுவலகம் போர்டிகோவில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் கொண்டப்பநாயக்கன்பட்டி, செட்டிசாவடி கிராமத்தை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்று கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மனு அளிக்க அனுமதித்தனர். இதுகுறித்து எம்எல்ஏ அருள் கூறுகையில் கொண்டப்பநாயக்கன்பட்டி, செட்டிசாவடி ஆகிய ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என சட்டமன்றத்தில் பேசினேன்.

 நகராட்சி அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் இந்த ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் இங்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் விதிக்கப்படும். இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என கூறினார்.

தொடர்புடைய செய்தி