அறக்கட்டளை நிர்வாகியை விடுவிக்ககோரி பெண்கள் திடீர்போராட்டம்

56பார்த்தது
சேலம் அம்மாப்பேட்டையில் சிவகாமி திருமண மண்டபத்தில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை செயல்பட்டு வந்தது. இதனை வேலூரை சேர்ந்த விஜயாபானு உள்ளிட்ட சிலர் நடத்தி வந்தனர். இவர்களது அறக்கட்டளையில் பணத்தை முதலீடு செய்தால் அதிகவட்டி மற்றும் இரட்டிப்பு தொகை தருவதாக அறிவித்தனர். இதனை நம்பி பொதுமக்கள் பலர் அவர்களிடம் பணத்தை முதலீடு செய்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து ரூ. 12 கோடியே 68 லட்சம், 2½ கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த மோசடி தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகி விஜயாபானு, ஜெயபிரதா, பாஸ்கர், சையத் முகமது உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ரூ. 500 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் அறக்கட்டளையில் பணம் கட்டிய 200-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று சேலம் கோட்டை மைதானத்திற்கு திடீரென திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயாபானு உள்ளிட்டவர்களை விடுவிக்க கோரி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி