சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

72பார்த்தது
தை மாத பௌர்ணமியை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். 

தொடர்ந்து அவர்களுக்கு பூஜை பொருட்கள், பித்தளை காமாட்சி விளக்கு, குங்குமச்சிமிழ், புடவை உள்ளிட்ட பிரசாத பை கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், அறநிலையத்துறை கமிஷனர் சபர்மதி, உதவி கமிஷனர் ராஜா, செயல் அலுவலர் அமுதசுரபி, அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் கூட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி