மேச்சேரியில் வேளாண் பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ
சேலம் மாவட்டம் மேச்சேரி வட்டார வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மேச்சேரியில் உழவர் திரள் பெருவிழா நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட பா. ம. க. செயலாளர் சதாசிவம் எம். எல். ஏ. கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கி பேசுகையில், விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு. தமிழக அரசு பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையான விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கை அறிவித்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் அரசு அறிவிக்கும் வேளாண் சார்ந்த நலத்திட்டங்களை பயன்படுத்தி அதிக அளவில் விவசாயம் செய்ய வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் அட்மா குழு உறுப்பினர் ஆறுமுகம், மேச்சேரி வடக்கு ஒன்றிய செயலாளர் அக்னி சுதாகர், வட்டார வேளாண் அலுவலர் ஷெரின், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் குமரவேல், வேளாண் அலுவலர் கீர்த்தனா, வேளாண் பொறியியல் உதவி செயற்பொறியாளர் ஜான்சிராணி, பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் பவித்ராதேவி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.