சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நேற்று இரவு நிலவரப்படி அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 70, 000 கன அடியாக குறைந்துள்ளது.
அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 120 அடியாகவும், நீர் இருப்பு 93, 470 டி. எம். சி. யாகவும் அதிகரித்துள்ளது.
16 கண் மதகு வழியாக 48, 500 கன அடியும், அனல்மின் நிலையம் வழியாக 21, 500 கன அடியும் காவேரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாயில் 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.