இன்று எடப்பாடியை அடுத்த வீரப்பம்பாளையம் பகுதியில் 15 நாட்களாக குடிநீர் வராததைக் கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் 'போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.