சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தொடர்ந்து இரவு நேரங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதைத்தொடர்ந்து வழக்கம் போல் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்ததால் ஏற்காடு மலைப்பகுதி மற்றும் ஏற்காட்டில் உள்ள பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் ஏற்காட்டு மலைப்பகுதியில் செல்லும் வாகனம் ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். ஏற்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை உடனே சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.