வெவ்வேறு இடங்களில் கஞ்சா வைத்திருந்த 7 பேர் கைது
சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவதாக மேட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேட்டூர் மாதையன் குட்டை பகுதியை சேர்ந்த வல்லரசு (வயது 24), சந்தோஷ் (19), வெற்றிவேல் (19), மேல்குள்ள வீரன்பட்டி பகுதியை சேர்ந்த மதன்குமார் (20), சிகாமணி (19) ஆகிய 5 பேரையும் மேட்டூர் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த 80 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அயோத்தியாப்பட்டணம் அருகே முட்டைகடை காலனி பகுதியில் காரிப்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்தின் பேரில் நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த தயாளன் (26), அவருடைய உறவினர் சிவகாசி பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் (31) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.