மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 30 ஆம் தேதி அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதையடுத்து அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் மூலம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அணையில் இருந்த திறக்கப்பட்ட உபரி நீரானது
மேச்சேரியில் உள்ள எம். காளிப்பட்டி ஏரி நிரம்பி அங்கிருந்து மற்ற பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் சென்று வருகிறது.
ஆனால் இந்த திட்டத்தில் நங்கவள்ளி அருகே உள்ள வைரன் ஏரி, வாதிப்பட்டி, குப்பம்பட்டி, கட்டிநாயகன் பட்டி, அரியாம்பட்டி, கரட்டு பட்டி பகுதியில் உள்ள எரிகளுக்கு உபரி நீர் திட்டத்தில் இணைக்கும் பணிகள் நடைபெறவில்லை. இதனை உடனடியாக நிறைவேற்ற கோரி காவிரி உபரி நீர் போராட்ட குழு மற்றும் சூரப்பள்ளி , பெரியசோரகை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் 100-கும் மேற்பட்டவர்கள் இன்று நங்கவள்ளியில் உள்ள வைரவன் ஏரியில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.